• Sep 14 2024

மெட்ராஸ் படமே காப்பி தான்..! பா. ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல சினிமா விமர்சகராக காணப்படுபவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவர் சினிமாவில் வெளியாகும் படங்களை மட்டுமின்றி அதன் இயக்குனர், நடிகர்கள் என அத்தனை பேரையும் தனது விமர்சனத்தின் மூலம் விளாசி இருப்பார்.

இவர் ஒரு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அளிப்பது என்பது மிக மிக அரிதாகவே காணப்படும். இவரது விமர்சனத்திற்காகவே பலர் காத்திருப்பார்கள். அத்துடன் பல பிரபலங்களும் இவரது பேச்சால் சண்டை வரை சென்றுள்ளார்கள்.

இந்த நிலையில், துப்பாக்கி படம் மட்டுமல்ல மெட்ராஸ் படமும் கோபி நயினாரின் படம் தான் என ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக பல ட்டுவிகளை பதிவிட்டு உள்ளதோடு கோபி நயினார் எடுக்க முயன்ற கருப்பர் நகரம் படத்தின் ஸ்டில்களையும் வெளியிட்டுள்ளார்.


அதாவது கர்ணன் மாமன்னன் படங்களை ஏன் பிடிக்கவில்லை என பா. ரஞ்சித் பேசியதற்கு தனது கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது இவ்வாறான டுவிட்களின் தொகுப்பை போட்டு அவரை பங்கம் பண்ணி உள்ளார்.


மேலும் மெட்ராஸ் படத்தின் அன்பு (கலையரசன்) கேரக்டரை நினைவூட்டும் காட்சி என வரிசையாக மெட்ராஸ் படம் எப்படி உருவானது என்றும் அதில் பின்னால் உள்ள பிளாஷ்பேக் மற்றும் சினிமா அரசியல் பற்றியும் தொடர்ந்தும் டுவிட் போட்டு வருகிறார்.


Advertisement

Advertisement