தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு இனிமேல் சினிமா தொழிலே வேண்டாம் என்று விலக போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்த பிறகுதான் நடிகர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக ரஜினி, விஜய் ஆகியோர்களின் சம்பளம் 200 கோடி ஆனதற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரித்த சில படங்கள் காரணமாக முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ’இந்தியன் 2’ திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தயாரிப்பில் உள்ளது என்பதும் அதேபோல் ’வேட்டையன்’ ’விடாமுயற்சி’ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லைகா நிறுவனம் தற்போது தயாரிப்பில் உள்ள படங்களை முடித்துவிட்டு சினிமா துறையில் இருந்து விலகப் போவதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.
Listen News!