• Jan 15 2025

அப்பன் செத்ததும் கேட்க ஆளில்லயா? லாஸ்லியா காஸ்ட்யூமுக்கு கண்டனம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் லாஸ்லியா கிளாமர் காஸ்ட்யூம் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார் என்பதும் அதனை அடுத்து தமிழ் சினிமாவிலும் சில திரைப்படங்கள் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 'பிரண்ட்ஷிப்' மற்றும் 'கூகுள் குட்டப்பா' ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் அவருக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இருப்பினும் அதற்கு எந்தவிதமான பயனும் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான காஸ்ட்யூம் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருந்த நிலையில் ஒரு சிலர் இந்த புகைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தாலும் பலர் இந்த புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரொம்ப மோசமாக இருக்கிறது என்றும், அப்பா செத்த உடன் கேட்க ஆள் இல்லை என்பதற்காக இது போன்ற மோசமான டிரஸ் அணிகிறீர்களா என்றும், உங்களுக்கு மாடர்ன் டிரஸ் நன்றாகத்தான் இருக்கிறது, அதற்காக இப்படி கேவலமாக டிரஸ் அணிய வேண்டாம் என்றும், பிக் பாஸில் எப்படி இருந்தீங்களோ அப்படியே மறுபடியும் வாருங்கள் என்றும் ,உங்கள் அப்பா இப்படியா உங்களை வளர்த்தார் என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement