• Mar 14 2026

இயக்குநராக இருந்து புதிய அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்- அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ்.ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படம், முக்கோண காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். இப்படங்களும் வசூலில் அள்ளிக் குவித்தது.


இறுதியாக நடிகர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இருப்பினும் வசூலில் அள்ளிக் குவித்தது.


இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இது ஒரு புறம் இருக்க இவர் தற்பொழுது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement