• Sep 20 2024

தீடீரென திருமணம் ஆகாத நடிகைகளை ஃபாலோ செய்யும் லோகேஷ் -இது என்ன புதுக்கதையாய் இருக்கு..காரணம் என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மெட்ரோ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் இயக்கிய கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார்.

சமீபத்தில் இவர் இயக்கத்திலும் கமல் நடிப்பிலும் வெளியான திரையப்டம் தான் விக்ரம். இத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்  இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறி பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.


இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை திரிஷாவை ஃபாலோ செய்ய துவங்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்விருவர் தான் விஜய் படத்தின் ஹீரோயின்கள் என கணிக்க துவங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இவர்கள் இருவரையும் தற்போது பின்தொடர என்ன காரணம் என்று அவரே கூறினால் தான் தெரியவரும்.

Advertisement

Advertisement