விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகிவிட்டது. வழமையாக பிக் பாஸ் சீசனின் பாதியில் தான் புது போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே செல்வார்கள். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு கூட விமர்சிக்கப்பட்டது.
இதன் காரணமாக பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டு, யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உள்ளே சென்ற ஐந்து போட்டியாளர்களில் அர்ச்சனாவும் ஒருவராக உள்ளார். அவர் பங்குபற்றிய முதல் நாளே மாயா அவரை அழவைத்ததை நாம் அறிவோம்.
இதற்கு 'என்னதான் எதிரியாக இருந்தாலும் வீட்டிற்கு புதிதாக வருபவர்களுடன் ஐந்து நேரம் சரி ஒதுக்கி பேசுவது தான் நாகரிகம்' என்று அர்ச்சனா கூறியிருந்தார்.
எனினும், நாகரிகம், நியாயம் எல்லாம் பிக்பாஸ் என்னும் ரத்த பூமிக்குப் பொருந்தாது. உள்ளே வரும் புதியவர்களை பழைய போட்டியாளர்கள் எரிச்சலுடன்தான் அணுகுவார்கள். விருப்பமின்றி புன்னகைப்பார்கள். இவை பற்றிய புரிதல் அர்ச்சனாவிற்கு இருக்க வேண்டும்.
மேலும் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும், 'நான் அழக்கூடாதுன்னு பார்க்கிறேன்' என்று தனக்குத்தானே பேசி மன உளைச்சலில் காணப்படுகிறார்.
இதேவேளை, புதியவர்களின் வரவால் பழைய போட்டியார்கள் தங்களது ஒற்றுமையை கடை பிடிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதனை சின்ன வீட்டார் எப்படி தகர்க்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Listen News!