• Jan 19 2025

தை பொங்கல் தினத்தை முன்னிட்டு லியோ ஜனனி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளராக கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், ஓவர் பில்டப் கொடுத்து, சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டதாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள்  குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றார். 

இந்த நிலையில்,  தற்பொழுது தை பொங்கல் தினத்தை முன்னிட்டு அழகிய புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றி உள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement