• May 19 2024

அயலான் திரைப்படம் மூன்றாம் நாளில் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?- அடிவாங்கியதா? அடிச்சு தூக்கியதா?

stella / 4 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சையின்ஸ் பிக்சன் திரைப்படமான இதை ரவிக்குமார் இயக்கி உள்ளார்.

 கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படத்திற்கு கூடுதல் பிளஸ் ஆக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.


அயலான் திரைப்படம் சுமார் 6 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தில் விஎப் எக்ஸ் காட்சிகள் மட்டும் 4 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. தமிழ் சினிமாவில் இத்தனை வி எப் எக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள அயலான் படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வரும் அயலான் திரைப்படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் இன்னும் கூடும் என சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement