• May 19 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் சரவணன் அருள்.இவர் ‘தி லெஜண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.

மேலும் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகின்றது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் ட்ரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளிவந்தது. இதில் ட்ரைலர் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று Youtubeல் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் சாதனையை முறியடித்துள்ளது, தி லெஜண்ட்.

மேலும் இதுவரை 19 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே Youtubeல் கொண்டுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரை 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பின்னுக்கு தள்ளியுள்ளது தி லெஜண்ட் ட்ரைலர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement