• May 30 2026

‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன்.. ஷுட்டிங் எப்போ ஸ்டார்ட் தெரியுமா? அதகள அப்டேட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அவர் தயாரித்த கனா, கொட்டுக்காளி போன்ற படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தாய் கிழவி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராதிகா சரத்குமார் நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் ‘சேயோன்’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.


அதில் அவர் கூறுகையில், தாய் கிழவி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். 

இந்தப் படம் உங்கள் பாட்டியை நினைவுப்படுத்தும். அம்மாவை நினைவுப்படுத்தும். கமல் சார் தயாரிப்பில் நான் அடுத்து நடிக்கும் அடுத்த படம் சேயோன். அதன் ஷூட்டிங் ஏப்ரலில் ஸ்டார்ட் ஆகிறது என்றார்.


 

Advertisement

Advertisement