சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி வீட்டுக்குச் சென்ற விஜயா, 'தனக்கு ஒரு இரவு யாரும் இல்லாமல் தனியாக இருந்ததே பெரும் கஷ்டமாக இருக்கிறது. நீ இத்தனை நாட்களாக எப்படி தனியாக இருந்தாய்.. இப்போது தான் உன்னுடைய கஷ்டம் புரிந்தது.' என்று தன்மையாக பேசுகின்றார்.
அதற்கு பின்பு மனோஜூம் சந்தோஷும் போட்ட திட்டத்தின்படி, மனோஜ் ஒளிந்து நின்று ரோகிணியை வீடியோ எடுக்க, சந்தோஷ் நான் உங்களுக்கு வாழ்க்கை தருகின்றேன். ஒரு தடவை யோசித்து சொல்லுமாறு கூறுகின்றார்.
இதைக் கேட்ட ரோகிணி, இதுல ஏதோ சதி இருக்கு என்பதை புரிந்து கொள்கின்றார். இதனால் அங்கிருந்து சென்றுவிட மனோஜ் - சந்தோஷும் இதை வைத்து எப்படியாவது வழக்கை வென்று விடலாம் என்று திட்டம் போடுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் மீனாவின் பூக்கடை உள்ள அப்பார்ட்மெண்டில் மனம் நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கத்தியை வைத்து தன்னை காயப்படுத்த முயன்ற போது, மீனா அவர் மீது பூக்களை கொட்டி காப்பாற்றுகின்றார்.
இறுதியில் மீனா எல்லோருக்கும் சமைத்து வீட்டில் இருந்து அனுப்பி விட, விஜயா அவளுடைய சாப்பாடு எங்களுக்கு வேண்டாம் என்று மனோஜையும் சாப்பிட விடாமல் பண்ணுகின்றார். ஆனால் மீனா விதம் விதமாக சமைத்து வைத்ததை பார்த்து இருவரும் ஏங்கி நிற்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்
Listen News!