• Nov 22 2024

8 பவுனுக்கு கூட வழியில்லை, 80 பவுனா? அப்பா அம்மா அளந்து விடுவதால் தங்கமயில் அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

எட்டு பவனுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நிலையில் 80 பவுன் நகை போடுகிறேன் என்று தனது அப்பா அம்மா சொன்னதை கேட்டு தங்கமயில் அதிர்ச்சி அடையும் காட்சிகள் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் எபிசோடில் உள்ளது.

கடந்த சனிக்கிழமை தங்கமயிலை பெண் பார்க்க பாண்டியன் குடும்பத்தினர் செல்லும் காட்சிகளுடன் முடிவடைந்த நிலையில் இன்று பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் பிடித்து விட்டதை அடுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்கின்றனர். 

அப்போது நான் பாண்டியன் மூத்த மகள் குழலி, ‘எனக்கு எங்க அப்பா 75 பவுன் போட்டார், உங்கள் பொண்ணுக்கு நீங்கள் எத்தனை பவுன் போடுவீர்கள்? என கேட்க அதற்கு தங்கமயில் அப்பா அம்மா அதிர்ச்சி அடைந்தாலும் பொய்களை சொல்லி சமாளிக்கின்றனர். 

உனக்கு 75 பவுன் உங்கப்பா போட்டார் சரி, ஆனால் உங்க வீட்டுக்கு வந்த மருமகள்கள் எத்தனை பவுனுகளுடன் வந்தார்கள்? என்று எதிர் கேள்வி கேட்கும் தங்கமயில் அம்மா, உன்னை விட அதிகமாக ஐந்து பவுன் எங்கள்  தங்க மயிலுக்கு 80 பவுன் போடுவோம்   என்று கூறுகிறார். 



இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் தங்கமயில் எல்லோரும் சென்ற பின்னர் நம்மிடம் 8 பவுன் கூட இல்லையே, எப்படி 80 பவுன் போடுவாய்? என கேட்க ’இருக்கிற தங்க நகைகளை போட்டு அதன் பிறகு மீதத்தை கவரிங்கில் போடலாம் என்று கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். 

நீங்கள் ஒரு நாளில் பொய்யை சொல்லி எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவீர்கள் ஆனால்  நான் வாழ்நாள் முழுவதும் நான் அங்கே தான் வாழ வேண்டும், நாம் சொன்ன பொய் தெரிந்தால் நமக்கு என்ன மரியாதை இருக்கும் என்று கூற அதெல்லாம் பாத்துக்கலாம் என்று தங்கமயில் அம்மா அசால்டாக கூறுகிறார். 

இந்த நிலையில் தான் மீனா, பெண் குடும்பத்தினர் குறித்து சந்தேகப்பட்டு, அந்த குடும்பத்தை பற்றி இன்னும் நன்றாக விசாரிப்போம், ஓவர் நல்லவங்க மாதிரி தெரிகிறது, என்று கூற பாண்டியனும் யோசிக்கிறார். 

தங்கமயில் குடும்பத்தை பற்றி பாண்டியன் விசாரிப்பாரா? விசாரிக்கும் அவருக்கு கிடைக்கும் தகவல்கள் என்னவாக இருக்கும்? சரவணன் - தங்கமயில் திருமணம் நடக்குமா? தங்கமயில் குடும்பத்தாரின் பொய்கள் வெளிப்படுமா? என்பதை அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement