நடிகர் ஜூனியர் N.T.R கலந்து கொண்ட மருத்துவமனை திறப்பு விழாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் நிகழ்ச்சி இடையே சிறிய பரபரப்பு ஏற்பட்டது. அந்த தருணத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் தொடர்ந்து கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிக் கொண்டிருந்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ரசிகர்களின் ஆரவாரம் காரணமாக பேச்சை தொடர சிரமம் ஏற்பட்டது. ரசிகர்கள் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் அவர் சற்று டென்ஷன் ஆனார்.
அப்போது ரசிகர்களை நோக்கி “Quiet.. Quiet.. Quiet..” என்று கூறி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது இந்த வார்த்தைகளுக்குப் பிறகு ரசிகர்கள் சில நேரம் அமைதியாகி, அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் ஜூனியர் என்.டி.ஆர் பதிலளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.
அப்போது அவர், “நான் மருத்துவராக இருந்தால் குழந்தைகள் மருத்துவராக இருப்பேன்.” என்று கூறினார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!