• Jan 18 2025

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 இல் என்ன ஸ்பெஷல் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2 ஒளிபரப்பாகவுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி, அதில் இடம்பெறுகின்ற மாறுபட்ட  நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. 

அதன்படி, கடந்த வாரம் முடிவுக்கு வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனலில் ஈழத்து குயிலான கில்மிஷா டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.


இதனை தொடர்ந்து ஜீ தமிழ்  டிவியில் அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை களமிறக்க உள்ளது. 

அதன்படி, எதிர்வரும் டிசம்பர் 23-ம் திகதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர் ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் தேர்வில்,  24 போட்டியாளர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து 12 திறமையான போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த 12 போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்கள் முதல் ரவுண்டான அறிமுக சுற்றின் மூலமாக தெரிய வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement