• Apr 26 2024

“என்னை கொன்று விடுங்கள்’ வலி தாங்க முடியவில்லை”; பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'அங்காடித் தெரு' என்ற படத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து தி.நகரில் பிழைப்பு நடத்தும் ஏழைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சிந்து. இப்படத்துக்கு பிறகு மேலும் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருந்தார். இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமாவில் வாய்ப்புக்கள் அமையவில்லை.


இந்நிலையில் சிந்து சமீபகாலமாக கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியானது பலரையும் பரிதாபம் கொள்ள செய்திருக்கிறது. அதில் அவர் கூறுகையில் "எனக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கேன்சர் வந்தது. அதனால் எனது மார்பகங்கள் முற்றாக அகற்றப்பட்டன. அன்றிலிருந்து நாட்டு மருத்துவம், ஆங்கில மருத்துவம் என வைத்தியத்தை மாறி மாறி பார்த்துவருகிறேன். ஆனாலும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை. 


மேலும் இதற்காக நான் மருத்துவர்களை குறை சொல்லவில்லை. நோய் மாறுவதற்கு என் உடல்தான் ஒத்துழைக்கவில்லை. கேன்சர் பாதிப்பில் நான் அவதிப்படுவதை பார்த்த நிறைய நண்பர்கள் எனக்கு இப்போதும் உதவி செய்கிறார்கள். அவர்கள் தயவால்தான் நான் சாப்பிடுகிறேன். அவர்களும் எத்தனை நாள்களுக்குத்தான் உதவுவார்கள். 

அவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என நினைத்து மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது கையில் வளையல் போடும் சூழல் உருவானது. ஆனால் அது எனக்கு ஒத்துக் கொள்ளாமல் அலர்ஜியாகி எனது கை பயங்கராமாக வீங்கியது. இதனையடுத்து தற்போது எனது இடது கை சுத்தமாக செயல்படவில்லை.


பின்னர் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் ஒரு மாதம் தங்கி நாட்டு வைத்தியம் பார்த்து வந்தேன் அப்போது எனது மார்பகங்களில் இருந்த புண்கள் ஆறின. ஆனால் அந்த சமயத்தில்தான் எனது மருமகன் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். இதனால் சென்னை வந்துவிட்டேன்" எனக் கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டதும் மூன்று ஆண்டுகள் மருத்துவர்கள் என்னை ஓய்வு எடுக்க சொன்னார்கள். ஆனால் நான் உழைத்தால்தான் எனது குடும்பத்தால் சாப்பிட முடியும். பின்னர் எங்கிருந்து நான் ஓய்வு எடுப்பது. எனது மகளும் எந்த வேலையும் இல்லாமல் கை குழந்தையுடன் கஷ்டப்படுகிறார். அவரையும் நான் தான் பார்த்துக்கொள்கிறேன். 


இப்படி நான் தினம் தினம் வலியால் துடிப்பதற்கு பதில் எனக்கு விஷம் ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என டாக்டர்களிடமும் கேட்டுப்பார்த்துவிட்டேன்" எனவும் கண் கலங்கியபடி கூறியுள்ளார். மேலும் "முதலமைச்சர் ஸ்டாலின் எனது சிகிச்சைக்கும், எனது மகளுக்கு ஒரு அரசு வேலையும் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை; பிறகு ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என தெரியவில்லை. வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் சாப்பாட்டிற்கே நான் சரியாக கஷ்டப்படுகிறேன்" எனவும் அந்தப் பேட்டியில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நடிகை சிந்து.

Advertisement

Advertisement

Advertisement