• Sep 20 2024

'நா ரெடி தான் வரவா' பாடலுக்கு.. தளபதியை மிஞ்சும் வகையில் டான்ஸ் ஆடிய 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்றான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலின் மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. இருப்பினும் இவர் அதிகம் பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலின் வாயிலாகத் தான்.


இந்த சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கேரக்டரில் அவர் அசத்தலாக நடித்து மிரட்டி இருப்பார். இதனால், அவருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாது சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் இவர் தற்போது சமீபத்தில் விஜய்யின் 'லியோ' படத்தில் இருந்து வெளியாகிய 'நாரெடி தான் வரவா..' பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கின்றார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "டான்ஸில் நம்ம தளபதியையே மிஞ்சி விட்டீர்கள்" எனக் கூறித் தமது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement