• Oct 09 2024

வக்கீலையே கலாய்த்த கரிகாலன்... முறைத்துப் பார்த்த கதிர்... ஜனனி சொன்ன குட் நியூஸ்... அட்டகாசமான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ஆடிட்டர் ஒரு வக்கீல் உடன் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். அனைவரும் ஒன்று கூடி ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆடிட்டர் புதிதாக என்ன பிரச்சினையை கொண்டு வந்து இருக்கிறார் என புரியவில்லையே என புலம்பி கொண்டு இருக்கிறார்கள் நந்தினியும், ரேணுகாவும்.


அப்போது வக்கீல் குணசேகரனிடம் "ஜீவானந்தம் பண்ணிய சொத்துப் பதிவு தப்புன்னு ப்ரூவ் பண்ணுவோம்" என்கிறார். அதற்கு குணசேகரன் "எப்பிடிப் பண்ணனும் என்று சொல்ல மாடடேங்குறீர்களே" என்கிறார். பதிலுக்கு கரிகாலன் "தெரிந்தால் சொல்ல மாட்டாரா" எனப் பங்கமாய் கலாய்க்கின்றார். இதனையடுத்து ஞானம், கதிர், குணசேகரன் மூவரும் கரிகாலனை முறைத்துப் பார்க்கின்றனர்.


மறுபுறம் ஜனனி "குணசேகரன் ஜீவானந்தத்தை மீட் பண்ணாமல் எதுவும் நடக்காது, சக்தி டீடைல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்ததும் ஜீவானந்தத்தை பார்க்கப் போறேன்" என நந்தினியிடமும், ரேணுகாவிடமும் கூறுகின்றார். 

Advertisement