• Sep 26 2023

ஆசைஆசையாய் சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விடும் அவரது மனைவி ஆர்த்தி- வைரலாகும் திருமண வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சாய் பல்லவி நடிக்க கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.எஸ் கே 21 படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 22 படத்தில் நடிக்கவுள்ளார்  என அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.


மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது. இவர் தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இந்த வீடியோ, ஆரத்தி சிவகார்த்திகேயனுக்கு உணவு ஊட்டி விட, சிவகார்த்திகேயன் வெட்கப்படுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement