இயக்குநர் ஏ.எல் விஜய் படத்தில் நடிப்பதாக 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு திடீரென அரசியலுக்கு சென்று விட்ட நடிகை படப்பிடிப்புக்கு வர முடியாது என்று கூறுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் நல்ல தரமான படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் என்பதும், ’கிரீடம்’ படத்தில் தனது இயக்குனர் பணியை தொடங்கிய அவர் ’மதராசப்பட்டணம்’ ’தெய்வ திருமகள்’ ’தலைவா’ ’தேவி’ ’லட்சுமி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். சமீபத்தில் வெளியான ’மிஷன் சாப்டர் 1’ படத்தை இயற்றிய நிலையில் தற்போது அவர் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும் தொடங்கி விட்டார்.
ஏற்கனவே ஏஎல் விஜய் இயக்கிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி ’என்ற படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்த நிலையில் மீண்டும் அவர் நடிக்க இருக்கிறார் என்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி கால்ஷீட் தேதிகளும் கொடுத்த நிலையில் திடீரென இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத் போட்டியிடுவதால் குறிப்பிட்ட நேரத்தில் அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
கங்கனா ரனாவத்துக்கு சம்பளம் ஏழு கோடி ரூபாய் பேசப்பட்டு மொத்த சம்பளமும் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்க வருவாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அரசியலில் பிசியாகி விடுவார் என்றும் அதன் பிறகு நடிக்க வருவது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரிடம் கொடுத்த ஏழு கோடி ரூபாயை வாங்கவும் முடியாது என்பதால் என்ன செய்வது என்று பட குழுவினர் திண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவேளை கங்கனா ரனாவத் தேர்தலில் தோல்வி அடைந்தால் படப்பிடிப்புக்கு வருவார் என்பதால் படக்குழுவினர் அவர் தேர்தலில் தோற்க வேண்டும் என்று சாமியை கும்பிட்டு வருவதாக தெரிகிறது.
Listen News!