• Jan 19 2025

19 வயசுலேயே பீர் அடிக்குதா? அனிகா சுரேந்திரன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து வரும் அனிகா சுரேந்திரனிடம் பீர் அடிப்பீர்களா? ஒயின் அடிப்பீர்களா?  என்று செய்தியாளர் கேட்ட நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரை உலகில் மூன்று வயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் அனிகா சுரேந்திரன் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் மகளாக நடித்திருந்தார் என்பதும் தற்போது அவர் தனுஷ் இயக்கி வரும்  திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனிகா சுரேந்திரனுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் இந்த வாய்ப்புகள் வருவதற்கு முக்கிய காரணம் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கிளாமர் புகைப்படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

17 வயதிலேயே அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்ததை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பதிவு செய்த நிலையில் அதன் காரணமாகத்தான் தற்போது அவருக்கு அடுக்கடுக்காக வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அனிகா சுரேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நீங்கள் பீர அருந்துவீர்களா? அல்லது ஒயின் அருந்துவீர்களா? என்று கேட்டபோது ’எனக்கு 19 வயது தான் ஆகிறது, அதற்குள் இந்த மாதிரி கேள்வி கேட்கிறீர்களே, தயவு செய்து இப்படி எல்லாம் கேள்வி கேட்காதீர்கள்’ என்று அவர் கும்பிட்டபடி கோரிக்கை விடுத்தார். ஒரு சிறு பெண்ணிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்ற நாகரீகம் கூட இல்லை என்று அந்த செய்தியாளர்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement