• Jan 15 2025

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் ரெக்கமண்ட் செய்த நடிகர்.. இதிலும் ஒரு சுயநலம்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறிய நிலையில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி விஜய் டிவி நிர்வாகத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது. இதுகுறித்து பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் ஒரு தொகுப்பாளரை முடிவு செய்ய முடியாமல் பிக்பாஸ் குழு திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் பிக் பாஸ் நிர்வாகத்திடம் சில பரிசீலனை சொன்னதாகவும் அதில் சிவகார்த்திகேயன் அல்லது சிம்பு ஆகிய இருவரில் ஒருவர் சரியாக இருப்பார்கள், இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று ரெக்கமண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.



குறிப்பாக சிவகார்த்திகேயனை புக் செய்யுங்கள், அவர் இந்த நிகழ்ச்சிக்கு செட் ஆவார் என்று கமல்ஹாசன் தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து விசாரித்தால் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ’அமரன்’ என்ற படம் உருவாகி நிலையில் அந்த படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் ஆக இருக்கும் என்று கமல் நினைப்பதாக தெரிகிறது.

பிக் பாஸ் தொடங்கும் தேதியும் ’அமரன்’ ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருந்தால் ’அமரன்’ படத்துக்கு மிகப்பெரிய ப்ரமோஷன் கிடைக்கும், மிகப்பெரிய வசூலும் கிடைக்கும் என்ற சுயநலமும் இதில் பின்னால் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement