• Sep 25 2024

கமல்ஹாசன் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் அவரது ரீ ரிலீஸ் படம் ஒன்றை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் உருவான ’குணா’ என்ற திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தின் சில ஐடியாக்களை வைத்து தான் சமீபத்தில் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குணா’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படத்தின் உரிமையை தான் வாங்கி உள்ளதாகவும் தன்னிடம் அனுமதி பெறாமல் ’குணா’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவுக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ’குணா’ திரைப்படம் இப்போதைக்கு ரீ ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement