• Sep 24 2024

ஒரே படத்தில் அஜித் - விஜய்.. பிரபல இயக்குனரின் முயற்சிக்கு வெற்றியா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது அஜித்தும் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் மற்றும் வெங்கட் பிரபு சமீபத்தில் சந்தித்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தான் இந்த கேள்வி தற்போது இணையத்தில் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த், அதன் பின்னர் த்ரிஷா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்ட சில பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அஜித் மற்றும் வெங்கட் பிரபு சந்திப்பு சமீபத்தில் நடந்ததாகவும் இந்த சந்திப்பில் சில முக்கிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜித்தின் 50 வது படமான ‘மங்காத்தா’ படத்தை இயக்கியது வெங்கட் பிரபு தான் என்ற நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்படுகிறது.



அது மட்டும் இன்றி ’கோட்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என அஜித்திடம் வெங்கட் பிரபு கேட்டுக் கொண்டதாகவும் அஜித் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. எனவே அஜித், விஜய் இணையும் காட்சி ’கோட்’ படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், ’கோட்’ படத்தில் அஜித் நடித்த காட்சிகள் இருக்குமா? இந்த தகவல் உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement