• Nov 23 2024

மெழுகு டோலு போல இருக்காங்களே..! 19 வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் ராஜஸ்தான் ஜெய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும் நடிகையுமான ஊர்வசி ரவுத்தேலா நடுவராக பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் 19 வயதான Rhea Singha  என்பவர் மிஸ் யுனிவர்ஸ்  பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

உலக அளவில் நடத்தப்படும் பிரபல போட்டிகளில் ஒன்று தான் மிஸ் யுனிவர்ஸ். இதில் வந்து விட்டால் இந்த பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பெயரையும் புகழையும் பெறலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்த அழகிகள் குறித்த போட்டியில் பங்கேற்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி கடந்த  செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல அழகிகள் கலந்து கொண்டார்கள். இதன் இறுதிப்போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. மொத்தமாக ஐந்து அழகிகள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் வெற்றிவாகை சூடப்போவது யாரென பரபரப்பாக கண்காணிக்கப்பட்டது. அதில் நடிகையும் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவும் ஆன ஊர்வசி ரவுத்தேலா நடுவராக பங்கேற்றுள்ளார். மேலும் வெறும் அழகை மட்டும் வைத்து தேர்ந்தெடுக்காமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவர்கள் சொல்லும் பதிலை வைத்து தான் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றார்கள்.


அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த 19 வயதான Rhea Singha என்பவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஊர்வசி ரவுத்தேலா மகுடம் சூடி

இதன் போது பட்டத்தை வென்ற Rhea Singha  கூறுகையில், நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி. இந்தப் பட்டத்துக்கு தகுதியானவள் என்பதற்காகவும்,  இந்த இடத்திற்கு நான் வர நிறைய வேலைகள் செய்துள்ளேன். இதற்கு முன் இந்த பட்டத்தை வென்றவர்களிடமிருந்து நான் ரொம்பவே இன்ஸ்பயர் ஆகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.




 


Advertisement

Advertisement