• Apr 28 2024

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் கமலஹாசனின் திரைப்படம்...எந்த படம் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள, கன்னட படங்களில் நடித்து முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மோகன்லால். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இவர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த த்ரிஷ்யம் என்ற படத்தை உலகநாயகன் கமல் நடித்த பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கானது. அதன் பின்னர் த்ரிஷ்யம் படத்தின் பார்ட் 2 கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

இருந்தபோதிலும் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய சில பிரச்சனைகள் எழுந்திருந்தன.

இந்நிலையில் இப்படம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது த்ரிஷ்யம் 1 மற்றும் 2 படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக போவதாக சொல்லபப்டுகிறது. 

மேலும் இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்கள், நடிகைகள் விவரங்கள் குறித்து கூடிய விரைவில் பட்டியல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement