• May 11 2024

ஊத்தப்பம் காமெடி இப்படித்தான் உருவாச்சு- வடிவேலு சேர் என்னை வேணாம் என்று சொன்னாரு- வெளிப்படையாகப் பேசிய டெலிபோன் ராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சிலர் மட்டுமே இன்றும் ரசிகர்கள் மனதிலும் அவர்கள் செய்த காமெடி மீம்ஸ் ரூபத்திலும் சோசியல் மீடியாவில் வலம் மீம்ஸ் வருகின்றன. அப்படி “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற காமெடி மூலம் பிரபல்யமானவர் தான் “டெலிபோன் ராஜ்” இவர் கிட்டதட்ட 2000திற்க்கும் மேற்பட்ட நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட சீரியல்கள், 200க்கும் மேற்பட்ட படங்கள் போன்றவற்றுள் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது கண்ணே கலைமானே என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இயக்குநர் வெங்கடேஷ் அவர் விஜய் நடித்த “பகவதி” படத்தில் நான் வடிவேல் சாருடன் நடிக்க வசனம் முதற்கொண்டு உடை அனைத்திலும் தயாராக வைத்திருந்தேன் இயக்குநரும் அதனை சரிபார்த்து விட்டார். சரி என்று நடிக்க சென்றேன். ஆனால் வடிவேல் சார் என்னை பார்த்தவுடன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.


நான் சென்று அண்ணே என்ன நான் வேண்டாமா என்று கேட்டேன், அதற்கு வடிவேலு அவர்கள் நீ யாருனே தெரியாது, காமெடிங்கிறது சும்மா கிடையாது போ போ காமெடிங்கிறது சொல்லிவிட்டார். பின்னர் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார் பின்னர் நான் அவரிடம் நான் மவுலியின் 2000 மேடை நாடகங்கள் நடித்த அனுபவம் இருக்கிறது, பல பேரிடம் நான் வடிவேலுவுடன் நடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என கூற அவரும் ஒரு வசனத்தை பேச சொல்லி சரி என்று ஒப்புக்கொண்டு நடிக்க சொன்னார் .

அப்படி உருவானது தான் “பகவதி” படத்தில் உள்ள காமெடி. என்ன காரணமோ தெரியவில்லை படம் வெளியாகும் போது நான் நடித்த அந்த காட்சியை படத்தில் இருந்து எடுத்து விட்டனர் என்று இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் என்னிடம் கூறினார்கள். நான் என்னடா முதன் முறையாக வடிவேலுடவுடன் நடித்த காமெடியை தூக்கிவிட்டார்கள் என்று நினைத்த நேரத்தில் தான் ‘அன்பு’ என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து. வடிவேலுவிடம் கேட்டு அவர் பரிந்துரைத்த பின்னர் தான் அந்த “முருகேசனை கூப்பிடுங்க” காமெடி உருவானது.


பின்னர் குருசேத்திரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கு 3000ருபாய் சம்பளம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அந்த மேனேஜர்,  படத்தில் நானும் வெறும் 3000ருபாய் தான் கொடுக்குறீங்க என கேட்க அவர் உடனே படக்குழு கூப்பிடுகிறார்கள் என்று கூறி அனுப்பி வைத்து விட்டார். பொதுவாக ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்றால் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகும். ஆனால் அந்த காட்சி வெறும் அரை மணிநேரத்தில் எடுக்கப்பட்ட காட்சி.

அந்த காமெடியில் ஒரு ராகம் போட சொன்னார்கள் நாளும் யோசித்து “அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று கூறியதும் அங்கிருந்த பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதனை பலரும் எனக்கு மிகவும் மகிச்சியாகி கொஞ்சம் இந்த ராகத்தையே மெருகேற்றி உருவானதுதான் அந்த ஊதாம்பம் காமெடி. இதனை நான் பலர் டிக் டாக் செய்து பார்த்திருக்கிறேன் அப்படி அதனை பார்க்கும் போதெல்லாம் நம்மை பார்த்து இவர்கள் டிக் டாக் செய்கின்றனர் என்று பெருமையாக இருக்கும் என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement