• May 12 2024

கமல்சேர் பற்றி தப்பா பேசல- வதந்தியைப் பரப்பாதீங்க- சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசீம் போட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் சண்டை, சச்சரவுகளும்; எந்த சீசனுக்கும் இல்லாத பேச்சு இந்த சீசனுக்கு எழுந்துள்ளது.

குறிப்பாக அசீமின் ஒவ்வொரு செயல்பாடும், பேச்சும் பலருக்கு முகசுளிப்பையே ஏற்படுத்தியது. திருநங்கையான ஷிவினை உடல்மொழியால் கிண்டல் செய்தது, பார்ப்பவர்களை எல்லாம் தரக்குறைவாக பேசியது என அசீம் எல்லை மீறியே சென்றார். இதனையடுத்து வாரா வாரம் ஹவுஸ் மேட்ஸுடன் பேசும் கமல் அசீமுக்கு தொடர்ந்து அட்வைஸ்ட் செய்தார். 


முக்கியமாக, உங்களது மகன் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் அட்வைஸ்ட் செய்து பார்த்தார். இருப்பினும் பிக்பாஸ் முடியும்வரை அசீம் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.ஒருவழியாக விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதிக்குள் நுழைந்தனர். விக்ரமனோ, ஷிவினோதான் பிக்பாஸ் 6 டைட்டில் வின்னராவார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.


சமீபத்தில் மக்களுடன் அசீம் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு். ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்க பல்லாயிரம் நாள்கள் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சியை பார்த்துதான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமே கிடையாது" என்றார்.


இந்நிலையில் அசீமின் இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். அசீம் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் கமல் ஹாசனைத்தான் மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார். தைரியம் இருந்தால் இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே கமலிடம் இப்படி சொல்லியிருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அசீம் தற்பொழுது புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் நான் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தேன் அதில் கமல் சேர் அவர்களை நான் தவறாகப் பேசியதாக கூறுகின்றனர்.ஆனால் நான் கமல் சேரைப் பற்றி தப்பாக சொல்லவில்லை. அவர் என்னுடைய நல்லதுக்காகத் தான் அந்த ஷோவில் கூறினார்.அவரைப் பற்றி நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. அப்படி சித்தரிக்கவும் வேண்டாம். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கு எங்களுக்கு லாபம் வருது என்பதற்காக என்னை இப்படி சொல்ல வேண்டாம். நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்றும் தெரிவித்து அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement