பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவு முன்பதிவு இல்லை என்று கூறப்படும் செய்தி படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’. இந்த படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் பெரிய அளவு இந்த திரைப்படத்திற்கு முன்பதிவு இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புக் மை ஷோ உள்பட ஆன்லைன் புக்கிங் இணையதளங்களில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்களை கிளிக் செய்து பார்த்தால் எங்கு பார்த்தாலும் பச்சையாக இருக்கிறது என்பதும் பல இருக்கைகள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே அனைத்து திரையரங்குகளிலும் முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகியுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் இந்த படத்திற்கு பெரிய அளவில் ஹைப் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு இருப்பதாகவும் முதல் காட்சி முடிவடைந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் ஒருவேளை புக்கிங் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Listen News!