சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய திருமணம் என்றால் அது சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ஆன ரவீந்தருக்கும் நடைபெற்ற திருமணம் தான். இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்றாலும் அந்த நேரத்தில் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.
தயாரிப்பாளராக காணப்படும் ரவீந்தர் உடல் அளவில் மிகவும் பெருத்தவராக காணப்படுகின்றார். அத்துடன் இவருக்கு உள்ள பண பலத்தின் காரணமாகத்தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்காது எனவும் பலர் கூறினார்கள்.
d_i_a
இதையெல்லாம் கண்டு கொள்ளாத மகாலட்சுமியும் ரவீந்தரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கடந்து வருகின்றார்கள். மேலும் இருவரும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள், கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ரசிகர்களுக்கு வெளியிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிக்காட்டுவார்கள்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் ரவீந்தர் பங்கு பெற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் தொகுத்து வழங்க வரும் விமர்சகர் என்பதால் ரவீந்தர் இறுதிவரை தாக்குப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இவர் முதலாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், சமூக வலைத்தள பக்கங்களில் தயாரிப்பாளர் ரவீந்தரின் மனைவியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக உள்ளது. அதில் அவர் நடிகர் ஒருவருடன் கழுத்தில் மாலையுடன் திருமண கோலத்தில் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எனினும் குறித்த புகைப்படம் தாயம்மா சீரியலுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதை தவறாக பார்த்த ரசிகர்கள் ரவீந்தரை விவாகரத்து செய்து புதிதாக திருமணத்தில் இணைந்துள்ளாரா மகாலட்சுமி என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
Listen News!