விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபல்யமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை .இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருபவர் கோமதி பிரியா. தனக்கு சீரியலில் இவ்வாறு நடிக்க ஆசை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
சிறகடிக்க ஆசை சீரியல் பல ரசிகர்களின் பெவரைட் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோயினியாக நடிக்கும் மீனா சமீபத்தில் நேர்கானல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் " நான் இந்த சீரியலில் நடிக்கிறது வீட்டில் யாருக்கும் தெரியாது. சிறகடிக்க ஆசை ப்ரோமோ பார்த்து தான் தெரிந்து கொண்டார்கள்.
நான் சென்னையில் தான் படித்து அங்கேயே இன்ஜினியரிங் முடித்தேன். ஆரம்பத்தில் படிக்கணும் வேலை செய்யணும் என்று தான் தோணுச்சு அப்புறம் அதுவே போர் அடிச்சிருச்சி. அப்போ ஒரு டைம் விஜய் டிவியில் ஒரு ஷோ நடந்தது அதுக்கு மாடலிங்க்கு வந்தேன் அப்போதான் முதல் முறை சூட் பார்த்தேன். அதற்குப்பிறகு நிறைய ட்ரை பண்ணுனேன் சரி வரவில்லை, அதனை தொடர்ந்து சீரியல்க்குள்ள வந்துட்டேன்" என்று கூறினார்.
d_i_a
மேலும் கூறிய அவர் " எனக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் இருந்தது. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் மோடலிங் செய்து வந்தேன். ஆரம்பத்தில் தெலுங்கில் எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என பலர் ஆச்சரியமாக கேட்டாங்க. எனக்கு மிகவும் ஆக்டிவா நடிக்க விருப்பம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இப்ப நடிக்கிற சீரியலில் ஒரே அழுதுகிட்டு சோகமா இருக்குற மாறி இருக்கு ஆனா எனக்கு மிகவும் சந்தோஷமான கேரெக்டர்ல நடிக்க பிடிக்கும்" என்று கூறியுள்ளார். தற்போது சிறகடிக்க ஆசை எனும் சீரியலில் நடித்து வருக்கிறார்.இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!