• Apr 26 2024

ஜவான் திரைப்படம் அட்லி சுட்ட சூடான இட்லி அல்ல ஆறிப்போன அல்வாப்பா..! தயாரிப்பாளர் பரபரப்பு புகார்..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

இப்படங்கள் யாவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. இருப்பினும் இப்படங்கள் யாவும் காப்பியடிக்கப்பட்ட படங்கள் என்றும் கூறப்படுகின்றது. அதாவது ராஜா ராணி திரைபடம் மோகனின் மௌனராகம் திரைப்படத்தின் காப்பி என்றும் தெறி விஜயகாந்தின் சத்திரியன் திரைப்படத்தின் காப்பி என்றும் கூறப்பட்டது.


அதே போல மெர்சல் திரைப்படம் கமலின் அபூர்வ சகோதரர்களின் காப்பி என்றும் கூறப்பட்டது. இதனால் இவர் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் முன்வரவில்லை. இந்த நிலையில் இவர் தற்கொழுது பாலிவூட் நடிகர் ஷாருகானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படமானது பேரரசு திரைப்படத்தின் காப்பி என்று பேரரசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.இதனால் வருகின்ற 9ம் திகதி இப்படத்தை விசாரிக்கவுள்ளதாக தமிழக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement