• May 20 2024

வாயை பிளக்கும் ரசிகர்கள்-விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் கலர் ஃபுல்லான ரொமான்டிக் ஸ்டில்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ஒரு படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொள்ளும் துணிச்சலான நடிகரும் ஆவார். எந்த கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்கும் இயல்பு கொண்டவர். இவரது நடிப்பில் சியான் 60 என்னும் கோப்ரா திரைப்படம் உருவாகி வருகின்றது

அந்தவகையில் ஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் எஸ்.எஸ் லலித் குமாரின் செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கோப்ரா திரைப்படம் உருவாகிவருகின்றது.இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளார்.. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த கோப்ரா கடந்த மாதம் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்போது படத்துக்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிவடைந்த நிலையில் படத்தினுடைய சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்தப் பாடலை முதல் தடவை கேட்கும்போதே மனம் கொள்ளை போகும் அளவிற்கு அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் உயிர் உருகுதே பாடலிலிருந்து புதிய ஸ்டில்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். உயிர் ஒரு புதிய பாடல் நடிகர் விக்ரம் ஸ்ரீநிதி செட்டி இடையேயான ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement