• Sep 20 2024

'ஜல்லிக்கட்டு புகழ்' பிக்பாஸ் வீட்டில் வைல்ட்காட் என்ட்ரியாக நுழையும் பெண் போட்டியாளர்..?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் 5 பேர்  வைல்ட்காட் என்ட்ரியாக வரவுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி பாடகி மானசி, விஜே அர்ச்சனா, பிஷ்னஸ்மேன் ஷாம் ஷாமுவேல்ஸ் ஆகியோர்  என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 

அதேவேளை, பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவி வைல்ட்காட் என்ட்ரியாக நுழையவுள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அடுத்த வைல்ட்காட் என்ட்ரியாக, அண்மையில் தென்மாவட்டத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று வர்ணனை செய்த அன்ன பாரதி என்ற பெண் தான் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் மற்றும் சின்னத்திரைக்கு  பரிச்சயமானவர் என கூறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement