ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை கண்ட பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் "ஜெயிலர் 2" பற்றிய பேச்சுகள் தற்போது கோலிவுட்டில் பரவி வருகிறது. அந்தவகையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நரசிம்மா படத்தில் நடித்த சிவராஜ் குமார் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிவராஜ் குமாருக்கு சமீபத்தில் உடல் நிலை சரியில்லை எனத் தகவல் வெளியாகி இருந்தது. அதன்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்ததாகவும் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாகவும் தற்பொழுது படக்குழு கூறியுள்ளது. அவரது உடல்நிலை மீண்டும் சீராகியதை உறுதிப்படுத்தும் வகையில், அவரே "மே மாதத்திற்கு பிறகு கன்னட படங்களில் நடிக்கத் தொடங்குவேன்" என அறிவித்துள்ளார். இதனால், "ஜெயிலர் 2"-ல் அவர் மீண்டும் நடிக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிவராஜ் குமார் உடல்நலக் கோளாறு காரணமாக அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர் திரையில் மீண்டும் எப்போது தோன்றுவார் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவல் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!