• Jan 19 2025

அந்த சீன் எடுக்கும் போது கூச்சமாக இருந்தது... எல்லாரையும் வெளியே அனுப்பினோம்! அஞ்சலி பகிர் தகவல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் தான் நடிகை அஞ்சலி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், சினிமாவில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கின்றேன்.  சில படங்களுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டேன். சண்டை காட்சிகளில் கூட டூப் இல்லாமலேயே நடிப்பேன்.

பகிஷ்கரனா வெப் தொடரில் மிகவும் மிகவும் அந்தரங்கமான காட்சியில் நடிக்க வேண்டி  இருந்தது. அப்போது எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த காட்சியை படமாக்கினார்கள். ஆனாலும் அதில் நடிக்கும் போது கூச்சமாகவும் டென்ஷன் ஆகவும் இருந்தது.


எத்தனையோ நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனது கேரக்டருக்கு முடிந்த அளவு நியாயம் செய்துள்ளேன். நான் எடுத்த எல்லா கேரக்டருக்கும் நான் எதிர்பார்த்ததை விட நல்ல பெயர் கிடைத்தது. இணையத்தில் எனக்கு எதிராக எதிர்மறை அவதூறுகள் விமர்சனங்கள் வரும்போது கொஞ்சம் வேதனைப்படுவேன். ஆனால் உடனே மறந்து விடுவேன். என் திருமணத்தை பற்றி கூட நிறைய வதந்திகள் வந்துள்ளன. நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement