• Apr 28 2024

''புலியே கால பின்னாடி வைச்சா புஸ்பா வந்திட்டான்னு அர்த்தம்''... ரிலீசானது புஷ்பா-2 படத்தின் டீசர்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள புஷ்பா2:தி ரூல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா: தி ரைஸ். இதனை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். செம்மரக்கடத்தலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகாவும் நடித்திருந்தனர்.

அவர்கள் மட்டுமன்றி, ஃபகத் ஃபாசில், தனஞ்செய், அஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர். நடிகை சமந்தா, “ஓ சொல்லுறீயா மாமா ..” பாடலுக்கு நடனமாடியிருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டிற்கு முன்பு வெளியாகியிருந்த இப்படத்தின் தாக்கம், இப்போது வரை நீடித்து வருகிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புஷ்பா 2 டீசர்:

புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனிற்கு நாளை பிறந்தநாள். இதையொட்டி, படத்தின் கான்செப்ட் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பினை பெற்று வருகிறது. 

இந்த படத்தில், திருப்பதி சிறையிலிருந்து தப்பியோடும் புஷ்பாவை காவல் துறையினர் கொன்று விட்டதாக செய்தி பரவுகிறது, இதனால் ஊர் முழுவதும் கலவரம் வெடிக்கிறது. புஷ்பா சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? அவரை உண்மையிலேயே காவல் துறையினர் கொன்று விட்டனரா என்ற கேள்விகளை இந்த டீசர் எழுப்பியுள்ளது. ”காட்டு விலங்குகள் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தால் புலி வந்துவிட்டது என்று அர்த்தம்..அந்த புலியே இரண்டடி பின்னால் எடுத்து வைத்தால் புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்..” என்ற பஞ்ச் வசனத்துடன் முடிகிறது, இன்று வெளியாகியுள்ள இந்த டீசர்.


ல் வெளியிடப்படவுள்ள புஷ்பா2 திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாகியுள்ளது. இந்த படத்தில், முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த நட்சத்திரங்கள் அப்படியே தொடருகின்றனர். முந்தைய படத்தில் கடைசி நிமிட காவல் அதிகாரியாக வந்து மாஸ் காட்டிய மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலிற்கு, இந்த இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் கொடுத்து கதையமைக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகத்தில், சந்தன மரங்களை பிறருக்காக கடத்தி வந்த புஷ்பா இந்த பாகத்தில் அந்த கடத்திலிலேயே பெரிய ஆளாக மாறுவதுதான் கதை. இவருக்கு வில்லனாக வரும் பல்பீர்சிங்தான் ஃபகத் ஃபாசில். ஆக மொத்தத்தில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் சண்டை, மசாலா, காதல் என அனைத்தும் கலந்து கலவையாக புஷ்பா:தி ரைஸ் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement