தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான உடல் மொழி, ஸ்டைல், நடிப்பு, வசன உச்சரிப்பு, சண்டை காட்சிகள் என அனைத்திலும் முத்திரை பதித்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது அந்த அளவுக்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்பட்டார்.
கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சினிமாவில் உச்சியில் இருந்த போது இவர் சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படையை உருவாக்கி இருந்தார். இதன் காரணமாகவே அனேகமான ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என அழைக்கப்பட்டார்.
சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். ஆனாலும் இவருக்கு அரசியல் தளத்தில் பல துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. இது விஜயகாந்த்க்கு மன உளைச்சலை கொடுத்தது.
இதன் காரணத்தினாலே சினிமாவில் இருந்து விலகியதோடு அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். இறுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் மகனான பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனாலும் திருமணம் நடக்கவில்லை. இதன் காரணத்தினால் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முடிந்த பிறகு பிரபாகரனின் திருமணம் நடக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
Listen News!