தமிழ் சினிமாவில் இந்த வாரம் பெரிய நடிகர்களின் படம் எதுவும் வெளியாகாத நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் ஆறு ரிலீஸ் ஆனது.
அந்த வகையில் போட், மழை பிடிக்காத மனிதன், பேச்சி, வாஸ்கோடகாமா, நண்பன் ஒருவன் வந்த பிறகு மற்றும் ஜமா என ஆறு படங்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீசானது.
இந்த நிலையில் இந்த படங்களில் வசூல் விபரம் பற்றி பார்க்கையில், யோகி பாபு நடித்த போட் திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து அரசியல் நையாண்டி படமாக காணப்பட்டுள்ளது. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் சுமார் 50 லட்சங்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் முதல் நாளில் 45 லட்சம், இரண்டாவது நாளில் 58 லட்சம் ஆக மொத்தம் இரண்டு நாட்களில் 1.03 கோடிகளையும் வசூலித்துள்ளது.
முழுக்க முழுக்க வனப்பகுதிக்குள் நடக்கும் திகில் நிறைந்த படம் தான் பேச்சி. சுற்றுலா சென்ற நண்பர்கள் குழு அடர் வனப்பகுதிக்குள் பேச்சி என்ற பேயிடம் மாட்டிக் கொள்கின்றார்கள். இறுதியில் எத்தனை பேர் வெளியே வந்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. இந்தப் படம் முதல் இரண்டு நாட்களில் 20 லட்சம் ரூபாய் தான் வசூலித்துள்ளது.
நடிகர் நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா திரைப்படம் நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு இந்த படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் இந்த படம் முதல் இரண்டு நாட்களில் 6 லட்சம் ரூபாய் தான் வசூலித்து உள்ளதாம்.
ஜமா என்ற படம் கூத்துக் கலைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 2 லட்சம் தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இறுதியில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற திரைப்படம் நகைச்சுவை, எமோஷனல் என நண்பர் வட்டாரத்தில் இருக்கும் அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிகாட்டி உள்ளது. இந்த படம் முதல் நாளில் ஆறு லட்சமும் இரண்டாவது நாளில் ஒன்பது லட்சம் மொத்தமாக 15 லட்சம் வரை வசூலித்துள்ளதாம்.
Listen News!