• Sep 14 2024

முத்து எடுத்த முடிவால் தலைகீழான வீடு.. விஜயா போட்ட கண்டிஷன்! திணறும் ரோகிணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் முத்துவும் மீனாவும் தாம் இருவரும் கிரிஷை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக அண்ணாமலை விஜயாவிடம் கூற, எல்லாரையும் தத்தெடுத்து வளர்க்க இதென்ன ஆச்சிரமமா என விஜயா கேட்கின்றார்.

ஆனாலும் முத்து கிரிஷை எங்களுடைய பையனாக வளர்க்க முடிவு பண்ணிட்டோம் என்று சொல்ல, வேற எங்க என்டாலும் கூட்டிக் கொண்டு போய் வச்சு வளங்க, ஆனா இந்த வீட்டுக்குள்ள கூட்டி  வரக்கூடாது என்று விஜயா சொல்லுகிறார்.


மேலும் அவன பெத்த அம்மாவே அந்தப் பையன வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டுப் போய்ட்டா.. உங்களுக்கு என்ன அக்கறை என்று பேச இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வெளியில்  நிற்கின்றார் ரோகினி.

இதைத்தொடர்ந்து ரோகிணி உள்ளே வர, முத்துவும் மீனாவும் கிரிஷை தத்தெடுக்கின்ற விஷயத்தை பற்றி சொல்லுகின்றார் விஜயா. அதற்கு முத்து க்ரிஷின் பாட்டி ஒத்துக்கொண்டால் நான் கட்டாயமாக அவனை தத்து எடுத்து வளர்ப்போம் என ஆணித்தரமாக  சொல்லுகின்றார்.

இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. எனவே இந்த விஷயம் தொடர்பில் ரோகினி எப்படியும் தனது அம்மாவிடம் கிரிஷை தத்து கொடுக்க வேண்டாம் என்று சொல்லுவார் எனத் தோன்றுகின்றது.

Advertisement

Advertisement