• Jan 19 2025

விஜய் நிஜ வாழ்க்கையிலும் ரொமாண்டிக்கானவரா?- உண்மையை உடைத்த பிரபலம், இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இவர் வசூல் நாயகனாகவும் வலம் வருகின்றார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இவர் தற்பொழுது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகின்றார்.யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு  வெளியாகவுள்ளதால் தளபதி ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்


ஆரம்பகாலகட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் படங்களிலே நடித்து வந்தார். அது மிகப்பெரிய அளவில் ஒர்கவுட் ஆனது.ஆனால் தற்பொழுது ஆக்ஷன் படங்களிலேயே அதிகமாக நடித்து வருகின்றார்.இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருக்க விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் விஜய்யிடம், ஆரம்பகாலகட்டத்தில் பல ரொமான்டிக் படங்களில் நடித்து இருக்கின்றீர்கள்.எனவே நிஜ வாழ்க்கையில் விஜய் எப்படி ? ரொமான்டிக்கான ஆளா ? என கேள்விகேட்டர். அதற்கு விஜய், கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படிதான் என கூறினார். இதைகேள்விப்பட்ட ரசிகர்கள்,விஜய் நிஜ வாழ்க்கையில் இவ்ளோ ரொமான்டிக்கான ஆளா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்

Advertisement

Advertisement