தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து நாயகனாக உருவெடுத்த நடிகர் சூரியின் நடிப்பு தற்போது மிகவும் பாராட்டப்பட்டு வருகின்றது. விடுதலை படத்திற்கு பின்பு இவர் நடித்து வரும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது.
அந்த வகையில் சூரியின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் கருடன். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. எந்த ஒரு காமெடி நடிகரும் பண்ணாத கடின உழைப்பால் இன்று ஏனைய பிரபலங்களை விடவும் உயர்ந்து உள்ளார்.
துரை செந்தில் குமார் இயக்கிய கருடன் படத்தில் நடிகர் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட இதன் வசூல் 39 கோடியை எட்டியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூரி இன்று தனது சொந்த ஊரான மதுரை கோபுரம் பகுதியில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து கருடன் படத்தை பார்வையிட்டுள்ளார். இதன் பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் கொடுத்த பேட்டியில், நல்ல படங்களை மக்கள் தலைதூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதை நான் நேரில் இன்று தான் பார்த்துள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் கருடன் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள். தொடர்ந்தும் நல்ல படங்களை மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
அண்மையில் விடுதலை, கருடன் என அடுத்தடுத்த படங்களின் வெற்றியை தொடர்ந்து இனிமேல் சூரி காமெடியனாக நடிப்பாரா என்ற கேள்வி பரவலாக கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு, எனக்கு இனிமேல் காமெடியனாக நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் நயனாக அடுத்தடுத்து நடிக்க இருப்பதாகவும் சூரி தெரிவித்து இருந்தார்.
இன்றைய பேட்டியிலும் அதற்கு பதிலளித்த சூரி, நான் எப்போதும் நாயகனாக இருக்க ஆசைப்படுகின்றேன். காமெடி கேரக்டரில் நடிக்க இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படி வாய்ப்பு வந்தால் நான் நடிக்க தயாராக இருக்கின்றேன்.
நாயகனா நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்தப் பாதையிலே போகலாம் என கருதுகிறேன் என்று சூரி வெளிப்படையாக சொல்லியுள்ளார்.
Listen News!