• Jul 31 2026

இது நிஜம் தானா.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வினுஷா! வைரலாகும் புகைப்படங்கள்!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக திகழும் நடிகை வினுஷா தேவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரான ‘பாரதி கண்ணம்மா’ மூலம் அதிக கவனம் பெற்றார். 

ஆரம்பத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் பின்னர் வினுஷா இணைந்து நடித்தார். அந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அவர், தற்போது ‘சுற்றும் வேலி சுடரை’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, டிஆர்பி பட்டியலிலும் முன்னணி இடங்களை பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது காதலருடன் வினுஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழா மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியான சூழலிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் வினுஷா மற்றும் அவரது வருங்கால கணவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த ஜோடிக்கு வாழ்த்து மழை பெய்து வருகிறது.


திருமணத்திற்குப் பிறகும் தனது நடிப்பு பயணத்தை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகளுடன் தனது கேரியரையும் தொடர்ந்து முன்னெடுப்பார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement