நடிகை அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படமான 'மொத ராத்திரி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் அனிஷ்மா, 2023-ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'பூவன்' மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் வெளியான 'சிறை' மற்றும் 'யூத்' ஆகிய திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனிஷ்மா வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பும், போஸ்டரின் வடிவமைப்பும் கதைக்களம் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
Listen News!