• Apr 26 2024

கவினோடு ஜோடி போடும் பிரபல நடிகை...இதை யாரும் எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' சரவணன் மீனாட்சி‘ தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்ட இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் சாதனை செய்து வருகிறது . திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்களையும் கவர்ந்துள்ளது.

 கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்க இருப்பதாகவும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அத்தோடு இந்த படத்தில் அனிருத் இசையமைக்கப் போவதாகவும் கூறப்பட்டதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.


இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி ஆக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ’டான்’ மற்றும் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, எம் ராஜேஷ் இயக்கும் படம் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’டாடா’ என்ற ஒரே படத்தின் வெற்றி காரணமாக அனிருத் இசையில் முன்னணி நடிகையுடன் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement