• Jan 19 2025

குடும்பத்துடன் ஜெனி வீட்டுக்குச் சென்ற எழில், செழியனைக் கண்டதும் கண்ணீர் வடித்த ஜெனி- பாக்கியாவுக்கு சர்ப்போட் செய்யும் ராதிகா- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகா பாக்கியாவுக்கு கை கொடுத்ததைப் பார்த்து செல்வி, கான்டீனை விட்டு துரத்தி விட்டிட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா சரி ஆகிடுமா என்று கேட்க, ராதிகா பாக்கியாவுக்கும் எனக்கும் போட்டி வந்தால் நான் தான் ஜெயிப்பேன் என்று நினைப்பேன் மற்றும்படி பாக்கியாவும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்கின்றார்.


இதனால் பாக்கியா சந்தோசப்படுவதோடு எழில், இவங்களை புரிஞ்சுக்கவே முடியல என்று சொல்கின்றார்.தொடர்ந்து செழியன் ஜெனியைத் தேடி அவரது அம்மா வீட்டுக்கு வர ஜெனியின் அம்மா பண்ணுற தப்பெல்லாம் பண்ணிட்டு வந்து மன்னிப்புக் கேட்டால் சரியா என்று திட்டி அனுப்பி விட ஜெனியும் அழுது கொண்டு நிற்கின்றார்.

பின்னர் பாக்கியாவும் ஜெனிக்கு வாய்ஸ் மெசேஜ் போடுகின்றார். தனக்கு கானன்ராக்ட் கிடைத்த விஷயத்தையும் சொல்லி,ஜெனியை அதிகம் மிஸ் செய்வதாகவும் சொல்ல ஜெனி அந்த வொய்ஸ் மெசேஜைக் கேட்டு கவலைப்படுகின்றார்.தொடர்ந்து பாக்கியா வீட்டில் தன்னுடன் வேலை செய்பவர்களை அழைத்து ஆடர் பற்றி பேசுகின்றார்.


பின்னர் அமிர்தாவும் எழிலும் நிலாப்பாப்பாவும் ஜெனி வீட்டுக்குச் செல்கின்றனர். இதனால் ஜெனி உள்ளே அவர்களை அழைத்து பேசுகின்றார். நிலா வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஜெனி இன்னும் கொஞ்ச நாள் கழித்து வந்திடுவேன் என்கின்றார். அப்போது அமிர்தாவும் ஜெனிக்கு அட்வைஸ்ட் பண்ணிவிட்டு போகின்றார்.

தொடர்ந்து பாக்கியா சூப்பர் மாக்கட் அண்ணாச்சியுடன் கடனுக்கு பொருட்கள் தரும்படி பேசிட்டு இருப்பதைப் பார்த்த கோபி பாக்கியாவால் மானம் போகுது, கடன் கேட்கிறா பார்த்தியா என சொல்ல ராதிகா திட்டி விட்டு பாக்கியாவைக் கூட்டிக் கொண்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement