• May 08 2024

நடிகர் நாகசைத்தன்யா பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங் செய்கின்றாரா?- அட இது தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகரான நாகசைத்தன்யா தனது காதல் மனைவியான சமந்தாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாக சைதன்யாவும், சமந்தாவும் சோஷியல் மீடியாவில் பதிவிடும் போஸ்ட்களை பார்த்து விட்டு,இருவரும் ஒருவரை ஒருவர் தற்போது வரை மிஸ் செய்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அண்மையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்த வீட்டை சமந்தா அதிக விலை கொடுத்து வாங்கி இருந்தார்.

அதனால் அவர் நினைவாக நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம்பிடித்து வாங்கி உள்ளார் என பலரும் கமெண்ட் செய்தனர்.இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபுலாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் சென்று வருவதாகவும் மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவிடமே இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நாக சைதன்யா, எனக்கு சிரிக்க தான் தோன்றுகிறது என பதிலளித்தார். இவரின் இந்த ரியாக்ஷனை பார்க்கும் போது இந்த கேள்விக்கு தான் பதலளிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

நடிகை சோபிதா நடித்த 'Made in Heaven', நெட்ஃபிளக்ஸ் தயாரித்துள்ள 'Monkey Man', மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ளன. இதை விட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement