• May 10 2024

மாடர்ன் ட்ரெஸ்ஸில் அனுஷ்கா… அடடே சற்று மெலிந்து விட்டாரே..?கமெண்டுகளைத் தெறிக்க விடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் ஒரு மாடலாக அறிமுகமாகி தனது திறமையினால் கதாநாயகியாக வளர்ந்தவரே நடிகை அனுஷ்கா சென். எனினும் அனுஷ்கா சென் 2009-ஆம் ஆண்டு ஜீ டீவியின் 'யஹான் மைன் கர் கர் கேலி' என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இந்திய நாடக நிகழ்ச்சித் தொடரான 'ஜான்சி கி ராணி' யில் மணிகர்னிகா ராவ்/ராணி லக்ஷ்மி பாயாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அனுஷ்கா சென் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தனது இளம் வயதிலேயே தனது நடிப்பினுடைய தனித் திறமையினால் நடிகையாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அதுமட்டுமன்றி பல இசை வெளியீட்டு வீடியோக்களிலும் தோன்றி இருக்கின்றார்.

இவ்வாறாக சினிமாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற அனுஷ்கா சென் சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருக்கத் தவறுவதில்லை. அதிலும் குறிப்பாக இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கின்ற ஒருவர். அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இவருடைய புகைப்படங்களை ரசிப்பதற்கு என்றே இன்ஸ்டாகிராமில் சுமார் 34.2 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இவர் தனது இன்ஸ்டாகிராமில் மேலும் மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டுவதற்காக படு கவர்ச்சி புகைப்படத்தை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திலும் இவர் மாடர்ன் ட்ரெஸ் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர் முன்னர் இருந்ததை விட தற்போது இன்னமும் மெலிந்து விட்டதாக கூறி தமது கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்தினை ஷேர் செய்து அதிகளவில் வைரலாக்கியும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement