உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் நாள், முதல் காட்சி முடிந்ததுமே இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்ததை அடுத்து அடுத்தடுத்த காட்சிகளில் இந்த படத்தின் வசூல் குறைந்தது.
அது மட்டுமின்றி முதல் நாள் இரவு காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததால் அந்த காட்சியில் கூட்டம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரூ.26 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது நாளில் இந்தியாவில் வெறும் ரூ.17 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தெரிகிறது.
நேற்று தமிழகத்தில் மட்டும் ரூ.11 கோடியும், இந்தியில் ரூ.1.2 கோடியும், தெலுங்கில் ரூ.2.5 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவில் முதல் இரண்டு நாட்களில் இந்தியன் 2 திரைப்படம் 43 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முதல் ’இந்தியன் 2’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் 20 நிமிடங்கள் கட் செய்தும் இந்த படத்திற்கு கூட்டம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இன்று ஓரு அளவு திரையரங்குகள் ஓரளவு நிரம்பி இருந்தாலும் நாளை சுத்தமாக இந்த படத்திற்கு இதுவரை பல தியேட்டர்களில் முன்பதிவு செய்யவில்லை.
ரூ.300 கோடிக்கு மேல் அதிகமாக செலவு செய்து உருவாக்கப்பட்ட ’இந்தியன் 2’ படத்தின் வசூல் மிக மோசமாக இருப்பதை அடுத்து தயாரிப்பு தரப்பினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Listen News!