பாடல்களுக்கும் , திரைப்படங்களுக்கும் உரிமம் வைத்திருபவர்கள் குறித்த பாடலை வேறொருவர் பயன்படுத்தும் போது உரிமம் கோருவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறு இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமம் கூறுவது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்றது.
இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்
பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம். இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாகக் கூறி, எக்கோ நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் வாதம். இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை தள்ளி வைப்பு.
Listen News!