• Jan 15 2025

ஆர்மில சேர்ந்திடாங்களா நம்ம மஹிமா நம்பியார்,புகைப்படம் உள்ளே !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு வெளியாகி அனைவர் மனங்களையும் வென்ற திரைப்படமான "சாட்டை" திரைப்படத்தில் அறிவு என்ற பாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை மஹிமா நம்பியார்.அனைத்து பக்கங்களாலும் பாராட்டை பெற்ற  இத் திரைப்படத்தில் குறித்த பாத்திரத்தில் நடித்த மஹிமாவும் பாராட்டுகளை பெற்று தனது அறிமுகத்தை வெற்றியாக மாற்றிக்கொண்டார்.


அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனது இடத்தை உயர்திக்கொண்டே வந்த மஹிமா 'குற்றம் 23' ,'கொடிவீரன்','இரவுக்கு ஆயிரம் கண்கள்' போன்ற திரைப்படங்களில் பேசப்பட்டும் பாத்திரங்களில் நடித்து பாராட்டை பெற்றிருந்தார்.அண்மையில் வெளியான 'சந்திரமுகி 2' இவரின் நடிப்பில் வெளியான படங்களில் சறுக்கலாக அமைந்திருந்தது.

Image

தற்போது மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் மஹிமா நம்பியார் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவும் உள்ளார்.தற்போது ஆர்மி ஜீன்ஸ் உம் பிளாக் டீ - ஷர்ட் உம் அணிந்து தனது புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மஹிமா நம்பியாரை எப்போ ஆர்மில சேர்ந்திங்க ? என கேள்வி கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.


Advertisement

Advertisement